சினிமா பிரதான செய்திகள்

கதாநாயகன் ஆகப்போகும் குண்டுப் பையன்!


தமிழ் சினிமாவில் பல முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்தவர் குழந்தை நட்சத்திரம் பரத்.  2002ஆம் ஆண்டு கமல் ஹாசனின் நடிப்பில் வெளிவந்த பஞ்சதந்திரம் திரைப்படத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானார்.  ஒரு குழந்தை நட்சத்திரமாக நகைச்சுவை, குணச் சித்திரப் பாத்திரங்களில் நடித்து தமிழக மற்றும் தெலுங்கு திரையுலகில் கவனத்தை ஈர்த்த பரத் தமிழ்நாட்டில் பிறந்தவர். இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர்.


சென்னையில் உள்ள வேளாங்கன்னி இண்டர்நஷனல் பாடசாலையில் கல்வி கற்றபோது இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார். இவரது நிகழ்ச்சிகளை பார்த்த எ.வி.எம் குரூப் தான் நைனா என்ற தெலுங்குத் திரைப்படத்தில் படத்தில் இவரை அறிமுகபடுத்தினர்.

தொடர்ந்து பஞ்சதந்திரம், போக்கிரி, வின்னர், உத்தம் புத்திரன் போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் கவனத்தை ஈர்க்கும் குழந்தை நட்சத்திரமானார். பரத் குழந்தை நட்சத்திரமாக 50ற்க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் வெளிவந்த ரெட்டி பட வெற்றிக்கு பின்னர் இவரை  பாடசாலையில் அனைவரும் சிட்டிநாயுடு என்றுதான் அழைப்பார்களாம். அத்துடன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.   இறுதியாக இஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்காவிற்கு தம்பியாக நடித்தார். குண்டுப் பையனாக திரைப்படங்களில் வலம் வந்த பரத்  விரைவில் கதாநாயகனாக திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply