இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் பதினொரு தேர்தல் விதிமுறை மீறல்கள் – மாவட்ட தேர்தல் அலுவலகம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உள்ளுராட்சி மன்றத் தோ்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் இதுவரை(12-01-2018) பதினொரு சம்பவங்கள் முறைப்பாடாக கிடைக்கப்பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜிடம் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கும் ஒன்பது அரசியல் கட்சிகளும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஒரு சுயேட்சைக் குழுவும் போட்டியிடுகின்றன.

எனவே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இன்று வரையான காலத்தில் பதினொரு தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்களே பதிவாகியுள்ளதோகவும், அதில் பிரமந்தனாறு பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்திற்குள் உள்நுழைந்து தாக்குவதற்கு முயற்சி செய்த சம்பவமே பெரிய தேர்தல் விதிமுறை மீறல் சம்பவமாக காணப்படுகிறது எனவும் மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளை விட வடக்கில் இந்த தேர்தலில் மிகமிக குறைந்தளவு தேர்தல் வன்முறைகளும்,விதிமுறை மீறல்களும் பதிவாகியுள்ளதாக கபே அமைப்பும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply