இலங்கை பிரதான செய்திகள்

பல்கலைக்கழக விண்ணப்பப்படிவம் நிரப்புதல் தொடர்பான வணிகத்துறை மாணவர்களுக்கான செயலமர்வு.


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளில் இருந்து 2017 இல் க.பொ.த(உ/த) பரீட்சைக்குத் தோற்றி அண்மையில் வெளியான பெறுபேறுகளின் படி பல்கலைக்கழக அனுமதிக்குத் தகமைபெற்ற வணிகத்துறை மாணவர்களுக்கான பல்கலைக்கழக விண்ணப்பப்படிவம் நிரப்புதல் தொடர்பான செயலமர்வொன்று கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகத்தால் நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 15-01-2018 திங்கட்கிழமை பி.ப 1.00 மணிக்கு கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள ஆசிரிய மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ள இச்செயலமர்வில் வணிகத்துறை மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடிய 31 கற்கை நெறிகள், அவற்றுக்கான அடிப்படைத் தகமைகள் , அக்கற்கை நெறிகளின் விருப்பொழுங்கினைத் தெரிவு செய்தல் , மேலதிக உளச்சார்புப் பரீட்சையினூடாக விண்ணப்பிக்கக்கூடிய பொதுவான கற்கைநெறிகள், இக்கற்கை நெறிகள் தொடர்பான அண்மைக்காலப் போக்குகள் என்பன தொடர்பாக துறைசார் வளவாளர்களால் விளக்கமளிக்கப்படவுள்ளது.

எனவே இச்செயலமர்வில் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகமைபெற்ற வணிகத்துறை மாணவர்களையும் , பொறுப்பாசிரியர் ஒருவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் கேட்டுக்கொள்கின்றார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.