இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியிலிருந்து தமிழர் நாட்காட்டி! குளோபல் தமிழ் செய்தியாளர்..

இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்திய காலத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழர் நாட்காட்டியை தற்காலத்துக்கு ஏற்ப வடிவமைத்து வெளியிட்டுள்ளார் கிளிநொச்சியை சேர்ந்த மின் பொறியியலாளரான மகேந்திரராசா.

2009இற்கு முன்னரான விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இத்தகைய நாட்காட்டிகள்  பயன்படுத்தப்பட்டிருந்தன. தமிழர்களின் சிறப்பு மிக்க நாட்கள், நினைவுகூரப்படவேண்டிய தமிழர் சரித்திரங்கள், மனிதர்கள், உலக நிகழ்வுகள் என்பவற்றை தாங்கியிருந்தன.

இந்த நிலையில் கிளிநொச்சியை சேர்ந்த மகேந்திரராசா, தனது தனிப்பட்ட முயற்சியாக தமிழர் நாட்டிகாட்டியை வடிவமைத்து வெளியிட்டு வருகிறார். இந்த நாட்காட்டியில் தமிழ் பண்பாட்டில் முக்கியமான நாட்கள், ஈழ விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான நிகழ்வுகள் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழர் புத்தாண்டான தை முதல் நாளுடன் தொடங்கும் இந்த நாட்காட்டியில் தமிழ் மாதங்கள், தமிழர்கள் பண்டைய காலத்தில் பயன்படுத்திய இலக்கங்கள் என்பன குறிப்பிடப்பட்டுள்ளதுடன், தமிழ் இலக்கங்களை அறிந்துகொள்ளும் விதம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.

 
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்..

Add Comment

Click here to post a comment

Leave a Reply