இலங்கை பிரதான செய்திகள்

ஊழலை ஒழிப்பதற்கு எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் – ஜனாதிபதி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்காக எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபா சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டிலிருந்து ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பது குறித்தான தமது முயற்சிகளின் போது எதிர்நோக்க நேரிடும் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள அஞ்சப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தம்புள்ள பிரதேசத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து வளங்களையும் கொண்ட இந்த நாட்டை ஊழல் மோசடி மிக்க அரசியல்வாதிகளினால் கட்டியெழுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்பும் முயற்சிகளின் போது கட்சி, இன மத பேதம் பாராட்டாது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply