இலங்கை பிரதான செய்திகள்

மட்டக்களப்பு புத்தூர் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல்…


மட்டக்களப்பு காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் 20ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகம் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் இது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அலுவலகத்தின் மேற்பகுதியில் இருந்த குறித்த வேட்பாளரின் பதாகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் வெளியிட்டுள்ளார். மேலும் தோல்வி பயத்தில் இருப்பவர்களே இவ்வாறான செயற்பாடுகளை Nமுற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Add Comment

Click here to post a comment

Leave a Reply