உலகம் பிரதான செய்திகள்

போர்த்துகல் ஓய்வு விடுதியில் தீவிபத்து 8 பேர் பலி…

போர்த்துகல் நாட்டில் ஒரு ஓய்வு விடுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்து மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தினை அடுத்து மக்கள் முண்டியடித்துக் கொண்டு வெளியேற முற்பட்டதன் காரணமாக நன சனநெரிசல் ஏற்பட்டதாகவும் இதனால் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போர்த்துகலில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers