இலங்கை பிரதான செய்திகள்

தமிழ் தலைமைகள் ஏமாற்றும் போது , நித்திரையாக இருக்க கூடாது –  அதனால் “நித்திரையா தமிழா” பாடலை ஒலிக்கவிட்டோம்..

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

தமிழ் தலைமைகள் தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருவதனால் தான் “நித்திரையா தமிழா எழுந்து வாடா .. ” எனும் பாடலை ஒலிக்க விட்டோம் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழில். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுகமும் , தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன் போது ஆரம்பத்தில் ” நித்திரையா தமிழா எழுந்து பாரடா … ” எனும் பாடல் உட்பட தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட எழுச்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டன.

அந்த பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டமை தென்னிலங்கை அரசியலில் பேசுபொருளானது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது கீச்சகத்தில் (டுவீட்டரில்) மைத்திரி தமிழீழத்தை அங்கீகரித்து விட்டாரா ? என கேள்வி எழுப்பி இருந்தார்.

அந்நிலையில் நேற்றைய தினம் இணையத்தளங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா தொலைபேசி ஊடாக திட்டினார். என செய்திகள் வெளியாகி இருந்தன.

அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் கேட்ட போது , அந்த செய்தியை சமூக வலைத்தளங்கள் இணையத்தளங்களில் பார்த்தேன். சிரித்தேன். அந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. அப்படி ஒரு சம்பவமும் நடக்க வில்லை.

அந்த நிகழ்வில் ஒலிக்கவிடப்பட்ட பாடல் தமிழர் எழுச்சிக்கான பாடல். அதை எந்தவிதமான உள்நோக்கத்துடனும் பார்க்க தேவையில்லை. நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்த்தவர்கள் , அதற்கு ஆதரவு அளிப்பவர்கள் என்பதனால் , தமிழர் எனும் உணர்வுகளை , உணர்சிகளை விட வேண்டும் என அவசியமில்லை. தமிழர் என்ற உணர்வு , உணர்ச்சி எப்பவும் இருக்கும்.

தமிழ் தலைமைகள் எங்களை தொடர்ந்து ஏமாற்றிகொண்டு இருக்கும் போது , நாங்கள் நித்திரையாக இருக்க கூடாது. நித்திரையில் இருந்து எழுந்து வர வேண்டும். அதனால் தான் அந்த பாட்டை ஒலிக்க விட்டோம். என தெரிவித்தார். அத்துடன் நாமலின் கேள்விக்கு உரிய நேரத்தில் உரிய இடத்தில் உரிய பதிலை வழங்குவேன் எனவும் தெரிவித்தார்.

“நித்திரையா தமிழா நிமிர்ந்து பாரடா இந்த இழிவில் இருந்து எழுந்தேன் என்று புலிகளாகடா” வேட்பாளர் அறிமுகத்தில் புலிகளின் பாடல்…

புலிகளின் பாடலை ஒலிக்க விட்டது சட்டவிரோதமானது. – கபே அமைப்பு:-

Add Comment

Click here to post a comment

Leave a Reply