Home சினிமா ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சிவகார்த்திகேயனின் படம்

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சிவகார்த்திகேயனின் படம்

by admin



உலக அளவில் பிரபலம் பெற்ற தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தில் இசையமைப்பாளராக  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து பொன்.ராம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்கின்றார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் என்ற நிறுவனம் தயாரித்து வரும் இந்தத் திரைப்படத்தில் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று படத்தின் முதல் சுவரொட்டியையும் படத்தின் பெயரையும் அறிவிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளது. இதேவேளை, பொன்.ராமின் வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
24 ஏ.எம் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. 2019-ம் ஆண்டில் இப்படம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.

முழுக்க அறிவியல் சம்பந்தப்பட்ட படம் என்பதால், இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் நீண்டகாலமாகவே நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தாண்டில் தொடங்கப்படவுள்ள படப்பிடிப்பிற்கு முன்பாக படக்குழுவினர் பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More