கல்முனை நகரில் தனியார் பேருந்து நிலையத்தை ஏற்படுத்தி தருமாறும், இணைந்த சேவையை உறுதிப்படுத்துமாறும் கோரி இன்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளனர்.
கல்முனை நகரிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இந்த பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
Add Comment