இலங்கை பிரதான செய்திகள்

இராணுவப் பயிற்சி குறித்து இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இராணுவப் பயிற்சி குறித்து இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜவேத் பஜ்வா ( Qamar Javed Bajwa ) இலங்கைக்கு பயணம்; செய்துள்ளார். பாகிஸ்தான் இராணுவத் தளபதி பஜ்வா, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.


கூட்டு இராணுவ பயிற்சிகளை முன்னெடுப்பது குறித்து இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பயணம் செய்துள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கு விசேட இராணுவ மரியாதை வழங்கப்பட்டிருந்தமை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.