இலங்கை பிரதான செய்திகள்

விடுதலைப்புலிகளின் தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய பெண்ணுக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொள்ளுப்பிட்டி தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய பெண் ஒருவருக்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு கொள்ளுப்பிட்டி காவல் நிலையம் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

செல்வகுமாரி சத்தியலீலா என்ற பெண்ணுக்கு இவ்வாறு இரண்டாண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் அந்த தண்டனை பதினைந்த ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் இந்த தண்டனை விதிக்கப்பட முன்னதாக ஜெயகுமாரி சத்தியலீலா கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.