இந்தியா சினிமா பிரதான செய்திகள்

கமல் கட்சியாகிறார்.. ஆன்மீக அரசியலுக்கு எதிர் வினையாகுமோ?


பெப்ரவரி 21-ம் திகதி கட்சியின் பெயரை வெளியிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஆரம்பக்கட்டச் சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இது நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருந்த ஒரு பயணம் எனவும் தெரிவித்துள்ளார்.

மக்களுடனான இந்தச் சந்திப்பு புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல எனவும் புரிதல் மற்றும் தனக்கான கல்வி எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதை மக்களோடு மக்களாக நின்று, தேசிய ஒருமைப்பட்டுக்கு உதாரணமாக இருக்கும் ராமநாதபுரம் மண்ணில் பெப்ரவரி 21-ம் திகதி தனது கட்சியின் பெயரை அறிவித்து தன் அரசியல் பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது என் நாடு, இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் தனக்கு மாத்திரம் இருந்தால் போதாது எனவும் தலைவன் என்பவன் வழிநடத்த மாத்திரமன்றி பின்பற்றுபவனாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பின் தொடர்வதற்கே ஒரு தலைமைப் பொறுப்பு இருக்க வேண்டும், நாமெல்லாம் சேர்ந்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம் அந்த நாயகர்களைச் சந்திக்கத்தான் நான் சென்றுகொண்டிருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஆட்சியைப் பிடிக்க திட்டமா? என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா? யாரின் ஆட்சி, யாரின் அரசு குடியின் அரசு அப்படியென்றால் முதலில் அவர்களை உயர்த்த வேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்த வேண்டும். அதை நோக்கிய பயணம்தான் இது. உங்களின் ஆதரவோடு இந்தப் பயணத்தை தொடங்குகிறேன். கரம் கோர்த்திடுங்கள். களத்தில் சந்திப்போம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நடிகர் ரஜனிகாந் ஏற்கனவே தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்திருக்கும் நிலையில் அவரது ஆண்மீக அரசியலுக்கு எதிர் நிலையை எடுப்பார் என எதிர்பார்க்கப்படும் கமலகாசனின் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து பெப்ரவரி 21க்குப் பின்னரை தெரிய வரும் என கூறப்படுகிறது.

 

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.