Home இந்தியா இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியுள்ளது

இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியுள்ளது

by admin

இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 135 ஓட்டங்களால் வெற்றியீட்டிள்ளது. இதன் மூலம் தென்னாபிரிக்க அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிகா 335 ஓட்டங்களையும் இந்தியா 307 ஓட்டங்களையும் பெற்றிருந்தன.

28 ஓட்டங்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆரம்பித்த  – தென்னாபிரிக்கா258 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இந்தியாவுக்கு 287 ஓட்டங்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்திய அணி 151 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த நிலையில் 135 ஓட்டங்களால் தென்னாப்பிரிக்க அணி வெற்றியீட்டியுள்ளது.

இந்தவகையில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளை தென்னாபிரிக்கா வென்றதன் மூலம் 2- 0 என்ற அடிப்படையில் தொடரையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  25 வருடத்தில் ஒருமுறை இந்தியா தென்னாபிரிக்காவில் கிரிக்கெட் தொடரை வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More