இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

விளையாட்டுத்துறைக்கு தற்காலிக தீர்வையே எமது அரசாங்கம் முன்வைக்கின்றது – அர்ஜுன ரணதுங்க

விளையாட்டுத்துறையில் தற்காலிக தீர்வை மட்டுமே முன்வைக்கும் அரசாங்கமாக எமது அரசாங்கம் உள்ளது என்று பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார். முன்னாள் தடகள பயிற்றுவிற்ப்பாளர் யோகனந்த விஜயசூரியவை கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஒலிம்பிக் குழு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வை  Save the Sports   என்ற தன்னார்வ அமைப்புஎதிர்கால விளையாட்டின் சுபீட்சம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்ற போதே அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘கடந்த காலங்களில் பல அரசியல் வாதிகள் விளையாட்டு வீரர்களைப் பற்றி விமர்சனங்கள் செய்தனர். பந்து வீச தெரியாத, துடுப்பாட்டம் ஆடத் தெரியாதோர் மைதானத்தில் இலகுவாக விளையாட முடியும் என நினைத்தனர். அப்படி இலகுவாக செய்துவிட முடியாது.

எனக்குத் தெரியும் சிலர் சுசன்திகா ஜயசிங்க மீதும் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். அப்படி பேசியவர்கள் விளையாடியவர்களா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர் எங்கே நாம் போகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று தேசிய வீரர்களை தேர்வு செய்யும்போது நிர்வாக குழுவில் உள்ள எத்தனைப்பேருக்கு கிரிக்கட் விளையாடத் தெரியும் எனவும் இதனால் தான் இன்று கிரிக்கட் விளையாட்டு கீழ்நிலை நோக்கிச் செல்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
; கிரிக்கட் விழ்ந்து இன்னும் விழவில்லை அது வீழ்வதற்கு சில காலம் எடுக்கும் எனவும் தெரிவித்த அவர் நாளை வெற்றிபெற்றால் ஹத்துருசிங்க அதிசயம் செய்துவிட்டார் எனவும் தோல்வியடைந்தால் எல்லாம் முடிந்துவிட்டது எனவும் சொலவ்h எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை நான் விளையாட்டுப் பக்கம் இருந்து பொறுப்புடன் சொல்கின்றேன் துரதிஸ்டவசமாக நான் இந்த அரசாங்கத்தில் உள்ளேன். அது எனக்கும் மிகவும் வேதனையாக உள்ளது எனவும் தெரிவித்தார்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.