உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கையுடனான போட்டியில் பங்களாதேஸ் 163 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி


பங்களாதேசில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஸ் அணி 163 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. பங்களாதேஸ்;, இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இலங்கை – பங்களாதேஸ்; அணிகள் போட்டியிட்டன.


நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தினை தேர்வு செய்த பங்களாதேஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 321 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 32.2 ஓவர்களில் 157 ஓட்டங்கள் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.இந்தநிலையில் பங்களாதேஸ் அணி 163 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.

இது ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்ட வித்தியாசத்தில் பங்களாதேஸ் அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.  பங்காளதேஸ் அணியின் ஷகிப் அல் ஹசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link