சினிமா பிரதான செய்திகள்

கமல்ஹாசனுடன் விக்ரம் இணைகின்றார்

கமல்ஹாசன் விக்ரம் மற்றும் அக்ஷரா ஹாசன் இணைந்து நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் அடுத்த படத்திலேயே இவர்கள் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த இரு படங்களையும் முடித்த பின்னர் விக்ரம் அடுத்ததாக ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தை கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்க இருப்பதாகவும், கமல் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தனது டுவிட்டரில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.  விக்ரமின் 56-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.