இந்தியா பிரதான செய்திகள் விளையாட்டு

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் கிண்ணத்தினை இந்தியா கைப்பற்றியுள்ளது

துபாயில் நடைபெற்று வந்த பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது . இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 308 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து 309 என்ற வெற்றில இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கட் இழப்பிற்கு 309 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. இந்திய வீரர் சுனில் ரமேஷ் 93 ஓட்டங்களும் அஜய் ரெட்டி 62 ஓட்டங்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருந்தனர்.

இந்தநிலையில் பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் கிண்ணத்தினை இந்தியா கைப்பற்றியுள்ளது. 2014-ம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பை கிரிக்கெட் கிண்ணத்தினை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.