உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்காவில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்து – இருவர் உயிரிழப்பு…


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இராணுவத்துக்கு சொந்தமான இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானியும், துணை விமானியும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானியும், துணை விமானியும் கொலராடோவில் போர்ட் கர்சானை தலைமையிடமாக கொண்ட படைப்பிரிவில் பணியாற்றி வந்தவர்கள் எனவும் வழமையான பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டபோதுதான் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர், அரிசோனா மாகாணத்தில் உள்ள போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஏஎச்-64 ரகத்தை சேர்ந்தது எனவும் விபத்து குறித்து விசாரணைக்கு அமெரிக்க ராணுவம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap