Home சினிமா அடுத்த சிவகார்த்திகேயன் களமிறக்குகிறார் தனுஷ்?

அடுத்த சிவகார்த்திகேயன் களமிறக்குகிறார் தனுஷ்?

by admin


தனுஷ் இயக்கத்தில் விஜய் ரிவி தீனா ஹீரோவாக நடிக்க உள்ளார். இதன்மூலம் மற்றும்ஒரு சிவகார்த்திகேயனை உருவாக்க தனுஷ் முயற்சி செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளதாக சினிமாத்துறையினர் கூறுகின்றனர். தனுஷ் சிவகார்த்திகேயனை தம்பி தம்பி என அழைத்ததுடன் அவருடன் நெருக்காமான அன்பை பகிர்ந்து வந்தார். சிவகார்த்திகேயனை கொலிவுட்டில் வளர்த்துவிட்டார். அதன் பின் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி புகழ் தீனாவை தான் இயக்கிய பவர் பாண்டி படத்தில் தனுஷ் நடிக்க வைத்தார். இப்போது தீனாவை அவர் ஹீரோவாக்கியுள்ளார்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ரித்விக் ரோஷனின் கட்டப்பனையிலே படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த படத்தை தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் தனுஷ் – தீனா ஹீரோவாக களமிறக்கி உள்ளார். சின்னத்திரையில் இருந்து வந்த சிவகார்த்திகேயனை வளர்த்துவிட்டு அழகு பார்த்த தனுஷ், அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தீனாவை ஹீரோவாக்கியுள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான நிலையில் தீனாவை – தனுஷ் – ஹீரோவாக்கியிருப்பது அடுத்த சிவாவை உருவாக்கவா என்ற கேள்வி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. சின்னத்திரையில் இருந்து வந்த சந்தானம் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ஹீரோவாகிவிட்டார். இந்நிலையில் மேலும் ஒரு சின்னத்திரை பிரபலம் ஹீரோவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More