உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை


அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இன்று 8.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . வடஅமெரிக்காவில் கனடா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா மாநிலத்தின் சினியக் நகரின் தென்கிழக்கே 256 கிலோமீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுக்கோலின்படி 8.2 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அலாஸ்கா மாநிலம் மற்றும் கனடாவின் சில கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதி முழுவதற்கும் சுனாமி கண்காணிப்பு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers