குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் குறித்த விமர்சனங்களை தென்கொரியா நிராகரித்துள்ளது. எதிர்வரும் மாதம் தென்கொரியாவின் சியோலில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை வடகொரியா கடத்தியுள்ளதாக சில தரப்பினர் விமர்சனம் செய்திருந்தனர். ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியாவை இணைத்துக் கொள்வதன் மூலம் அணுத் திட்டம் உள்ளிட்ட பதற்றத்தை குறைக்க முடியும் என தென் கொரியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
வடகொரியா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதனை தென்கொரியாவின் சில அரசியல் கட்சிகள் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரிய தீபகற்பத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான ஓர் படிக்கல்லாக இந்த ஒலிம்பிக் போட்டிகள் அமையும் என தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment