சஞ்சய் பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங் நடித்துள்ள பத்மாவத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரியானா மாநிலம் குருகிராமில் கர்னி சேனா அமைப்பினர் பேருந்துக்கு தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறியே கர்னி சேனா உள்ளிட்ட அமைப்பினர் இத் திரைப்படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதேவேளை இத் திரைப்படத்திற்கு எதிராக தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. எனினும் வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், படத்துக்கு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து, இப்படம் நாளை திரைக்கு வருகின்றது. எனினும், படத்துக்கு எதிராக வடமாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட கர்னி சேனா அமைப்பினர் பேருந்துகளுக்கு தீ வைத்தும் வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். பத்மாவத் படம் நாளை திரைக்கு வரும் நிலையில், கர்னி சேனா அமைப்பினரின் போராட்டங்களால் வடமாநிலங்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குஜராத் மாநிலத்தில் பத்மாவத் திரைப்படத்தை திரையிடுவதில்லை என மல்டிபிளக்ஸ் அசோசியேசன் சார்பில் முடிவு செய்துள்ளது படக்குழுவை பெரும் அதிர்ச்சியாக்கு உள்ளாக்கியுள்ளது.
Spread the love
Add Comment