இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் 113 நிலையங்களில் தபால் மூலம் வாக்களிப்பு நிலையங்கள்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி மாவட்டத்தில் 113 தபால் மூலம் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது என கிளிநொச்சி மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ. அமல்ராஜ் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 2018 இற்கான தபால் மூலம் வாக்களிப்பு இன்று(25) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதில் 17159 பேர் தபால் மூலம் வாக்களிப்புக்கு விண்ணப்பித்து வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.

ஏற்கனவே 12 நிலையங்களில் தபால் மூலம் வாக்களிப்பு இடம்பெற்றுள்ள நிலையங்களில் இன்று(25) 101 நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

அலுவலக நேரத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க முடியும் எனவும் நாளைய(26) தினமும் வாக்களிக்கலாம் என்பதோடு இந்த இரு தினங்களிலும் வாக்களிக்க தவற விட்டவர்கள் எதிர்வரும் முதலாம் மாவட்ட உதவித் தேர்தல் அலுவலகத்திற்கு சமூகமளித்து வாக்களிக்க முடியும் எனவும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமலராஜ் தெரிவித்தார்.

இன்றையதினம் மாவட்ட உதவி தேர்தல் அலுவலகத்தில் இருந்து தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் அதிகாலை முதல் பேரூந்து மற்றும் ஏனைய வாகனங்களில் மாவட்டத்தில் உள்ள தபால் மூலம் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.