இந்தியா பிரதான செய்திகள்

காஷ்மீர் பகுதிக்குள் பெண் தீவிரவாதி ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது


இந்தியாவின் 69-வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் காஷ்மீர் பகுதிக்குள் பெண் தீவிரவாதி ஒருவர் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதனை தொடர்ந்து அங்கு இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளனர்.  முக்கிய நகரங்களில் காவல்துறையினரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவுர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் மைதானத்தில் நாளை குடியரசு தின அணிவகுப்பு நடைபெற உள்ளதனால் அங்கு அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதற்காக 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்தாகவும் காஷ்மீரில் உள்ள பல இடங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link