“தேர்தலில் தனித்து களமிறங்க நேர்ந்துள்ள போதிலும் தேர்தலின் பின்னர் மீண்டும் தேசிய அரசாங்கமாகவே ஆட்சியினை முன்னெடுப்போம். ஜனாதிபதி – பிரதமர் இணைந்து ஊழலை ஒழிக்கும் அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பார்கள்” என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பொது எதிரணி – தமிழ் தேசியக் கூட்டமைப்பு என அனைவரும் இணைந்து ஆட்சியினை முன்னெடுக்கும் பயணத்தில் ஒத்துழைப்பு வழங்கினாலும் ஆதரிக்கத்தயாராகவே உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்னவென்பது அனைவருக்குமே தெரியும். இதில் பிரதான இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டினை முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இதில் அனைவருக்கும் பங்களிப்பு உள்ளது. பொது எதிரணியாக இருக்கலாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருக்கலாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டினை சரியாக முன்னெடுத்து செல்ல முடியும். அதில் எந்த தடைகளும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேசிய அரசாங்கத்தின் நகர்வுகள் குறித்து கேள்வி எழுப்பிய போதே இதனைக் குறிப்பிட்டார்.
Add Comment