Home சினிமா நடிகர், பாடகர் என ரசிகர்களை கவர்ந்த கிரிஷ் புதிய பாதையில்…

நடிகர், பாடகர் என ரசிகர்களை கவர்ந்த கிரிஷ் புதிய பாதையில்…

by admin

நடிகர், பாடகர் என ரசிகர்களை கவர்ந்த கிரிஷ், தற்போது புதிய அவதாரம் ஒன்று எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அழகிய அசுரா என்ற படம் மூலம் கதாநாயகனுக்கு நண்பராக கிரிஷ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார். இதனைத் தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் மஞ்சள் வெயில் என்ற பாடலை பாடியதன் மூலம் பாடகராக அறிமுகமானார்.

இந்த பாடல் சூப்பர் ஹிட்டானதனைத் தொடர்ந்து பல பாடல்களை பாடி வந்தார். பல பாடல்களைப் பாயுள்ள கிரிஷ் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற படம் மூலம் கதாநாயகனாக மாறினார். இதன்பின் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த கிரிஷ், சூர்யாவின் சிங்கம் 3 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

நடிகர், பாடகர் என பிரபலமான கிரிஷ் தற்போது இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடிகராக இருந்து பாடகராக மாறினேன். பாடகராக இருந்து நடிகராக மாறினேன். தற்போது நடிகராக இருந்து இசையமைப்பாளராக மாறியிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ள கிரிஷ் இந்த வருடம் இரண்டு அல்லது மூன்று படங்களுக்கு இசையமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தன்னால் முடிந்தளவிற்கு சிறந்த இசையை தனது ரசிகர்களுக்கு வழங்குவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More