இலங்கை பிரதான செய்திகள்

தென் கொரியாவில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு கிடையாது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென்கொரியாவில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு கிடையாது என வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. தென்கொரியாவின் மிரியாங்கில் அமைந்துள்ள செஜொங் வைத்தியசாலையில் பாரிய தீ விபத்துச் சம்பவமொன்று இன்று காலை ஏற்பட்டிருந்தது.

தென் கொரியாவிற்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் தென் கொரிய அதிகாரிகளுடன் தொடர்பு பேணி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலன்னே தெரிவித்துள்ளார்.  இந்த தீ விபத்துச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 37 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 70 பேர் வரையில் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.