இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

முத்தரப்பு இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை, சிம்பாப்வே, பங்களாதேஸ் அணிகள் மோதிய முத்தரப்பு கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. இன்றையதினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் போட்டியிட்ட நிலையில் இலங்கை அணி 79 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 222 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய பங்களாதேஸ் அணி 41.1 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.