உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்காவின் “Devumi” ருவிட்டர் லைக்குகளை விற்பனை செய்ததா – விசாரணைக்கு உத்தரவு…


சமூக ஊடகமான ருவிட்டரில் இயங்குபவர்களை, அவர்களது ருவிட்டர் கணக்கில் பின் தொடர்வதற்கென போலியான தானியங்கி ருவிட்டர் கணக்குகளை தொடங்கி அவற்றை விற்பனை செய்ததாகக் கருதப்படும் நிறுவனத்தை, விசாரிக்க அமெரிக்க நீதித் துறை உத்தரவிட்டுள்ளது.

திரை நட்சத்திரங்கள், அரசியல் விமர்சகர்கள், தொழில் முனைவோர்கள் தங்களை ருவிட்டரில் அதிகம் பேர் பின் தொடர்வதை விரும்புவார்கள். இவர்களை பின் தொடர்வதற்கென போலி தானியங்கி கணக்குகளை உருவாக்கி அந்த கணக்குகளை அவர்களுக்கு அமெரிக்காவின் ஒரு நிறுவனம் விற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள நியூயார்க் சட்டமா அதிபர் ஜெனரல் எரிக், “ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி நியூயார்க் சட்டத்திற்கு விரோதமானது” எனத் தெரிவித்துள்ளார். “டேவுமி” (Devumi) என்ற நிறுவனமே இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி உள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை “டேவுமி” நிறுவனம் மறுத்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் டேவுமி (Devumi) தனது இணையதளத்தில் ருவிட்டரில் பின் தொடர்பவர்கள் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்துள்ளது. குறைந்தபட்ச விலை 12 டாலர்கள் எனவும் அதில் கூறி உள்ளது. அதுபோல, வாடிக்கையாளர்களுக்கு `லைக்ஸ் மற்றும் ருவிட் -களும் விற்பனைக்கு உள்ளதாக கூறி உள்ளது.

ருவிட்விட்டர் மற்றும் அல்லாமல் பிற சமூக ஊடக கணக்குகளான பின்ட்ரஸ்ட், யுடியூப் ஆகியவற்றுக்கும் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை போலியாக உயர்த்தி உள்ளது. ருவிட்டரில் அதிகமாக பின் தொடர்பவர்களை வைத்துள்ள கணக்கு கருத்தியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்த முடியும். அதுபோல, அந்த கணக்குகளை இடப்படும் இடுகைகள் அதிக பலன்களை கொண்டு வந்து சேர்க்கும்.

டேவுமி நிறுவனம் நியூயார்க்கில் பதிவுபெற்ற நிறுவனம் என்றாலும், அதன் ஊழியர்கள் பிலிப்பைன்ஸில் இருந்தே செயல்படுவதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில், இது போன்ற நிறுவனங்கள் மீது உறுதியான நடவடிக்கையை ருட்விட்டர் நிறுவனம் எடுக்கவில்லை என்று அதன் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில் “டேவுமி (Devumi) மற்றும் இதுபோல செயல்படும் நிறுவனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி உள்ள ருவிட்டர் நிறுவனம், ருவிட்டர் பகிர்ந்துள்ள ஒரு ட்விட்டில், டேவுமி மற்றும் அதுபோல செயல்படும் நிறுவனங்களின் தந்திரங்கள் எங்களது கொள்கைக்கு எதிரானது. அவர்களை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கூறி உள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap