உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

இருபதுக்கு இருபது துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை – பாபர் அஸம் முதலிடம்

பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான பாபர் அஸம் (Babur Azam )  ஐசிசியின் இருபதுக்கு இருபது துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் 2-1 எனத் தொடரைக் கைப்பற்றியிருந்தது.

இதில் பாபர்  அஸம் 109 ஓட்டங்களைப் பெற் 11 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். பாபர்  அஸம்  786 புள்ளிகளைப் nhற்றுள்ளார். அவுஸ்திரேலிய வீரர் அரோன் பிஞ்ச் 784 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் இந்திய அணித்தலைவர் விராட் கோலி 776 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் தொடரைக் கைப்பற்றியதன் மூலம் 126 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதல் இடத்தை பிடித்துள்ளது. 123 புள்ளிகளுடன் நியூசிலாந்து 2-வது இடத்தையும், 121 புள்ளிகளுடன் இந்தியா 3-வது இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் 718 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 717 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இஷ் சோதி 712 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.