இந்தியா சினிமா பிரதான செய்திகள்

‘சொடக்கு மேல சொடக்கு ‘ க்கு வந்த சோதனை


தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு மேல சொடக்கு பாடலை மொழி பெயர்த்து தருமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படமான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தில் இடம்பெற்ற சொடக்கு மேல சொடக்கு போடுது என்ற பாடலில் உள்ள சில வரிகளை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்தப் பாடலில் வரும் விரட்டி விரட்டி வெளுக்க. அதிகார திமிரை விரட்டி விரட்டி வெளுக்க தோணுது என்ற வரிகள் வன்முறையை தூண்டும் விதத்திலும், அரசியல்வாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளதாகவும் இந்த வரிகளை நீக்குமாறு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில் சொடக்கு மேல சொடக்கு பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.