Home சினிமா ஹொலிவுட்டில் கலக்கும் ப்ரியங்கா சோப்ரா பொலிவுட்டில் களமாட கௌரி ஷாருக்கான் தடையா?

ஹொலிவுட்டில் கலக்கும் ப்ரியங்கா சோப்ரா பொலிவுட்டில் களமாட கௌரி ஷாருக்கான் தடையா?

by admin

பொலிவுட் சுப்பர்ஸ்ரார் ஷாருக்கானுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக ப்ரியங்கா சோப்ராவுக்கு பெரிய பட வாய்ப்புகள் வருவது இல்லை எனக் கூறப்படுகிறது. பொலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கும், ஷாருக்கானுக்கும் இடையில் இரகசியத் தொடர்பு இருந்ததாக பொலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இதனால் ஷாருக்கானுக்கும், அவரின் மனைவி கௌரிக்கும் இடையே பிரச்சனை என செய்திகள் வெளியாகின. அதன் பின் ஷாருக்கானும், ப்ரியங்காவும் பிரிந்துவிட்டனர்.

ஷாருக்கான் காதல் முறிவுக்கு பிறகு ஷாருக்கானும், ப்ரியங்கா சோப்ராவும் சேர்ந்து நடிப்பது இல்லை. என்பதுடன் பொது இடங்களில் சந்திக்க நேர்ந்தாலும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் விலகிச் சென்றார்கள்.

ஹொலிவுட்டில் பிசியாக இருக்கும் ப்ரியங்கா சோப்ராவுக்கு பொலிவுட்டில் பெரிய பட வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. இதற்கு ஷாருக்கானின் மனைவி கௌரி ஒரு வகையில் காரணம் என்று பேசப்படுகிறது.

விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஆமீர் கான், ப்ரியங்கா சோப்ரா நடிக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அமீர் கான் படத்தில் இருந்து விலகியதால் ஷாருக்கான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஷாருக்கானை ஆமீர் கான் பரிந்துரை செய்துள்ளார்.

ஆமீர் கான் விலகி ஷாருக்கான் ஒப்பந்தம் ஆனதால் வேறு வழியில்லாமல் ப்ரியங்கா சோப்ரா அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார். இது ப்ரியங்காவின் நட்பு வட்டாரத்தை கோபம் அடைய வைத்துள்ளது.

டான் 2 படத்தில் ஷாருக்கானும், ப்ரியங்கா சோப்ராவும் நடித்தனர். இந்நிலையில் டான் 3 படத்திற்கு வேறு ஒரு ஹீரோயினை தேடிக் கொண்டிருப்பதாக பொலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More