குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவியையும் இழக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகிறது. ரவி கருணாநாயக்க தனது பதவியை விலகுவதனையே பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரும்புகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் குழுவும், ரவி கருணாநாயக்கவை கட்சி பதவியிலிருந்து நீக்குமாறு பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Add Comment