இலங்கையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மாணவர்கள் சிலர் சித்திரவதைக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் 7ம் தர மாணவர்கள் 9 பேர் உடல் மற்றும் உள ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அச்சபையின் தலைவி சட்டத்தரணி மரிணி டி லிவேரா கூறினார்.
அந்த பாடசாலையின் மாணவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்த சம்பவம் தொடர்பாக உரியதரப்பினரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment