இலங்கை பிரதான செய்திகள்

70ம் சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய ஆயிரம் ரூபா அறிமுகம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாட்டின் சுதந்திர 70ம் சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆயிரம் ரூபா நாணயத்தாளின் விசேட அம்சங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விளக்கமளித்துள்ளது. விசேட நினைவு நாணயத் தாள் 06.02.2018 இலிருந்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக புழக்கத்தில் விடப்பட உள்ளது.

அதேநேரம் ஆரம்பத் தொடர் இலக்கங்களுடன் கூடிய மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான நாணயத் தாள்கள் அழகாக பொதியிடப்பட்டு ஒவ்வொன்றும் ரூ.1,300 இற்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த நாணயத்தாள்களை இல.54, சதம் வீதி, கொழும்பு 01 இல் அமைந்துள்ள பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சிச்சாலையிலும் மத்திய வங்கியின் அநுராதபுரம், மாத்தறை, மாத்தளை, திருகோணமலை மற்றும் கிளிநொச்சி பிரதேச அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap