இலங்கை பிரதான செய்திகள்

சிவசக்திஆனந்தன் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்


2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் இது தொடர்பான அறிவித்தலை சட்டத்தரணிகள் அறிவிப்பார்கள் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் நடைபெற்ற யாழ். நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிவசக்தி ஆனந்தனுக்கு வவுனியாவில் இருந்து உளவு வேலை செய்வதற்காக வழங்கப்பட்ட விடுதியினையே கட்சி அலுவலகமாக பாவித்துக்கொண்டிருந்ததாகவும் தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூறிய பின்னரே இப்போது அது அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித் அவர் தற்போது, மக்களின் அபிவிருத்திக்கான கருத்துக்களைக் கேட்பதை தவறென்று சொல்கின்றார் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசின் காலத்தில் இங்குள்ள ஒரு அமைச்சரின் கருத்துக்களின் படி அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டது எனவும் இங்கு செலவிட்ட பணத்தின் அளவு தமக்கு ஒதுக்கப்படும் நிதியின் ஒரு துளி கூட இல்லை எனவும் அவர் தான் அந்த அபிவிருத்திகளைச் செய்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக கூறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இந்த விடயம் எல்லை மீறிப் போயுள்ளது. ஆகவே சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers