இலங்கை பிரதான செய்திகள்

இலவசக் கருத்தரங்கு –

இலங்கை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் இயங்கிவரும் இலங்கை ஊடகப் பயிற்சி நிறுவனத்தினால் தமிழ் ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் துறைசார் ஆர்வலர்களுடனான இலவச கருத்தரங்கு இம் மாதம் 18 ஆம் திகதி ஞயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது . யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள குடும்ப நல மருத்துவ நிறுவன மண்டபத்தில் காலை 9 மணியிலிருந்து 11 மணிவரை நடைபெறவுள்ள .

இந் நிகழ்வில் தமிழ் ஊடகத்துறையை மேம்படுத்தவும், தமிழ் மொழி பேசும் ஊடகவியலாளர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டும், இளம் ஊடக ஆர்வலர்களின் வழிகாட்டுதல் தொடர்பிலும் கலந்துரையாடப் பட உள்ளது . இக் கருத்தரங்கில் ஊடகத்துறையை கற்கும் பாடசாலை மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள் , ஊடகத் துறையில் இணைய விரும்பும் ஆர்வலர்கள் , ஊடகங்களில் பணி புரியும் ஊடகளவியலாளர்கள் மற்றும் துறை சார்ந்தோரை பங்கு கொள்ளும்படி அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

எனவே  கலந்துகொள்ள விரும்புபவர்கள் 011 2685720 , 011 2692507 என்ற இலக்கங்கள் ஊடாக தங்களை முன்பதிவு செய்து வரவினை உறுதிப் படுத்தும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது. .

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap