குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
சில முக்கிய ராஜதந்திர பதவிகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு வெளிவிவகார அமைச்சு திட்டமிட்டுள்ளது. வெளிவிவகார சேவையில் மறுசீரமைப்பை முன்னெடுக்கும் நோக்கில், வெளிநாடுகளில் இயங்கி வரும் இலங்கைக்கான தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகர் பதவிகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. மிகவும் முக்கியமான ராஜதந்திர பதவிகளில் மாற்றம் செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க இலங்கைக்கு மீள அழைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வொஷிங்டன், ஐக்கிய நாடுகள் அமைப்பு, மொஸ்கோ, புரோடோரியா, பிரேசலியா உள்ளிட்ட நகரங்களுக்கான ராஜதந்திர பதவிகளில் மாற்றம் செய்பய்பட உள்ளது.
Add Comment