இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

நுவரெலியா புரூக்சைட் தோட்டத்தில் ஆறு ,வீடுகளுக்குள் புகுந்ததால் 25 வீடுகள் பாதிப்பு

நுவரெலியா மாவட்டம் ராகல புரூக்சைட் தோட்டத்தில் அன்மையில் தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக ஆறு பெருக்கெடுத்து வீட்டுக்குள் புகுந்துள்ளது. இதனால் 25 வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதுடன் பாதிக்கபட்ட மக்கள் தோட்ட சனசமூக நிலையத்திலும் உறவினர்களின் வீடுகளிலும் தற்காலிகமாக தங்கி உள்ளனர்.

அதேவேளை ராகலை ராகல தோட்டம் மேல்; பிரிவில் அன்மையில் பெய்த மழை காரணமாக தோட்டத்தின் வைத்தியசாலைக்குள் நீர் புகுந்ததால் அங்கிருந்த பொருட்கள் உட்பட வைத்திய உபகரணங்கள். ஆவணங்கள் தளபாடங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இதனால் வைத்திய சேவையை பெற்றுக் கொள்ளும் நோயாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply