சினிமா பிரதான செய்திகள்

இளமை தோற்றத்தில் அஜித் வரும் விஸ்வாசம்பட்டையை கிளப்புமா?


சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் படம் வடசென்னையை மையப்படுத்தி உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு பெப்ரவரி 22-ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதாகவும் தொடர்ந்து 5மாதங்கள் படப்பிடிப்பு மேற்கொள்ளவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அஜித் – சிவா நான்காவது முறையாக இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  இந்த படம் குறித்து பல்வேறு வாந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது இந்த படம் வடசென்னையை மையப்படுத்தி உருவாக இருப்பதாகவும், இந்த படத்தில் அஜித் தாதாவாக நடிப்பதாகவும் புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.


இந்த படத்தின் கதாநாயகி மற்றும் வில்லன் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித் இளமை தோற்றத்தில் நடிக்கிறார் என்பதுடன் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply