சினிமா பிரதான செய்திகள்

அமீர் கானின் ‘சீக்ரட் சூப்பர் ஸ்டார்’ சீனாவில் 509 கோடி ரூபா வசூலித்து சாதனை,

பொலிவூட் நாயகன் அமீர் கான் நடிப்பில் அண்மையில் வெளியான ‘சீக்ரட் சூப்பர் ஸ்டார்’ என்ற திரைப்படம் சீனாவில் 509 கோடி ரூபா வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்திய திரைப்படங்களுக்குஅண்மைக்காலமாக கிழக்காசிய நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘முத்து’, ‘கபாலி’ ஆகிய படங்கள் ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் வசூலை பெற்றிருந்தன.

இதேபோல், ஹிந்திப் படங்களில் அமீர் கான் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘டங்கல்’ படம் சீனாவில் சுமார் 1215 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருந்தது.

இந்தநிலையில், இருவாரங்களுக்கு முன்னர் வெளியான ‘சீக்ரட் சூப்பர் ஸ்டார்’ திரைப்படம் சீனாவில் 509 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் ‘டங்கல்’ படத்தின் வசூல் சாதனையை ‘சீக்ரட் சூப்பர் ஸ்டார்’ முறியடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply