Home உலகம் இத்தாலியின் Le Marche region மையப்பகுதியில் துப்பாக்கிச் சூடு 6 பேர் காயம்…

இத்தாலியின் Le Marche region மையப்பகுதியில் துப்பாக்கிச் சூடு 6 பேர் காயம்…

by admin

இத்தாலியின் Le Marche region மையப்பகுதியில் இன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட இனம் தெரியாத நபரை காவற்துறையினர் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று உள்ளூர் நேரப்படி 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 6 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூரில் Luca Traini என அழைக்கப்படும் 28 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும்,கைது செய்யப்பட்டுள்ள இவர் மீதான விசாரணைகள் தொடர்வதாகவும் பிராந்திய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு பிராந்திய தேர்தல்களில் பங்குபற்றியுள்ள அவர் வெளிநாட்டு குடியேற்றவாசிகளுக்கும், குடியேற்றத்திற்கும் எதிரான Northern Leagueஐ பிரதிநிதித்துவப்படுத்துபவர் என தெரிவிக்கப்படுகிறது. இவரை கைது செய்த போது ஒரு பாசிச வணக்கத்தை (fascist salute) செய்தார் என காவற்துறையினர் கூறுகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More