உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

எதிர்வரும் போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்துவோம் – எய்டன் மார்க்ரம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எதிர்வரும் போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்துவோம் என தென் ஆபிரிக்க அணியின் தலைவர் எய்டன் மார்க்ரம் (Aiden Markram)  தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில், தென் ஆபிரிக்கா படுதோல்வியைத் தழுவியிருந்தது. இந்த தோல்வியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தோல்வி அணியின் வீரர்களுக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும், வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையுடன் இருக்கின்றார்கள் எனவும், சிறந்த திறமைகளை வெளிப்படுத்த முடியவில்லை என தமக்கு தாமே வருந்திக்கொள்வதாகவும் எய்டன் மார்க்ரம் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.