சினிமா பிரதான செய்திகள்

‘களவாணி 2’ ஐ களவாடப் போட்டி….

விமல், ஓவியா, சூரி நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த திரைப்படத்தை இயக்கியிருந்தவர் சற்குணம். நசீர் தயாரித்திருந்த இப்படத்தின் 2-ம் பாகத்திற்கான தலைப்பிற்காக கடும் போட்டி நிலவி வருகிறது. களவானி படத்தை இயக்கிய இயக்குனருக்கும் தயாரித்த தயாரிப்பாளருக்கும் இடையிலேயே இப் போட்டி நிலவுகிறது.

சற்குணம் இயக்கி, தயாரிக்க மீண்டும் விமல், ஓவியா நடிக்கும் புதிய படத்திற்கு ‘K 2’ களவானி 2 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை இயக்குனர் சற்குணம் மாதவனை நாயகனாக வைத்து விரைவில் தொடங்கியுள்ள படத்திற்கு முன்பாக, ‘களவாணி 2 முடிக்க திட்டமிட்டுள்ளார் சற்குணம்.

இந்நிலையில், ‘களவாணி’ திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரான நசீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘களவாணி 2’ படத்திற்கான கதை விவாதம் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது பூனம் கவுர் நடிப்பில் மதிவாணன் இயக்கத்தில் ‘வதம்’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருவதாகவும் மே மாதம் இப்படம் வெளியாகவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து முக்கிய நடிகர் நடிகையர் நடிக்க ‘களவாணி 2’ என்ற படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

‘களவாணி 2’ படத்திற்கான படத் தலைப்பின் உரிமையை ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையே பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள நசீர், இப்படத்தின் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்றும் மேலும் கூறியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply