குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் அப்துல் கயூம் கைது செய்யப்பட்டுள்ளார். அப்துல் கயூமுடன் அவரது மருமகனும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் மாலைதீவில் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
நேற்றைய தினம் நள்ளிரவில் அப்துல் கயூம் மற்றும் அவரது மருமகனை பாதுகாப்பு தரப்பினர் வீட்டுக்கு சென்று கைது செய்துள்ளனர். 1978ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையில் மொஹமன் அப்துல் கயூம் நாட்டின் ஜனாதிபதியாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக கயூம் எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment