சினிமா பிரதான செய்திகள்

தெலுங்குப் பக்கமாக பறந்த ஊதா கலர் ரிப்பன்


ஊதா கலர் ரிப்பன் பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்ட ஸ்ரீதிவ்யா தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமையினால் தாய்மொழியான தெலுங்கு பக்கமே நடிக்க சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் அறிமுகமான ஸ்ரீதிவ்யா தொடர்ந்து வந்த இரு ஆண்டுகளும் முக்கிய கதாநாயகியாக திகழ்ந்து வந்தார்.


எனினும் தற்போது கீர்த்தி சுரேஷ் போன்றோர் முன்னணி கதாநாயகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புக்கள் சென்று விட்டதனால் ஸ்ரீதிவ்யாக்கு வாய்ப்புகள் குறைந்து விட்டன. அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும ஒரு படம் படம் மட்டுமே ஸ்ரீதிவ்யா கையில் உள்ளது. இந்தநிலையில் அவர் தற்போது தனது சொந்த மொழியான தெலுங்கு பக்கம் கவனம் செலுத்துகிறாராம். தெலுங்கில் சின்ன படமாக இருந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு இறங்கியிருக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply