உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துகின்ற நாடுகளின் பட்டியலில் மேற்திந்திய தீவுகள்அணியும் இணைந்துள்ளது.

பகல்-இரவு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை நடத்துகின்ற நாடுகளின் பட்டியலில் மேற்திந்திய தீவுகள்அணியும் இணைந்துள்ளது. இதுவரை அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற நாடுகளே பகல்-இரவு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை நடத்தி வந்தன.

ஐந்து நாட்கள் போட்டி என்பதால் டெஸ்ட் போட்டிற்கான மதிப்பு குறைந்து வருகின்ற நிலையில் பகல்-இரவு ஆட்டமாக நடத்த சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்தது. அந்தவகையில் முதன்முறையாக அவுஸ்திரேலியாவில் பகல் இரவு டெஸ்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்தின.

இந்தநிலையில் மேற்திந்திய கிரிக்கெட் வாரியம் முதன்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளது. 10 வருடங்க்ள கழித்து இலங்கை அணியும் இந்த பகல் இரவுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக மேற்திந்திய தீவுகளுக்கு செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.