உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தடைகளுக்கு எதிராக ரஸ்ய வீர வீராங்கனைகள் மேன்முறையீடு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தடைகளுக்கு எதிராக ரஸ்ய வீர வீராங்கனைகள் மேன்முறையீடு செய்ய உள்ளனர். சுமார் 32 வீர வீராங்கனைகள் இவ்வாறு மேன்முறையீடு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாழ்நாள் தடை நீக்கப்பட்ட சிலரும் இந்த மேன்முறையீட்டை செய்துள்ளனர். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இந்த முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ரஸ்யா மீது தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின் வீர வீராங்கனைகள் சுயாதீன அடிப்படையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் பேரவை அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு சுமார் 169 வீர வீராங்கனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply