இந்தியா பிரதான செய்திகள்

உத்தரகாண்ட் – மகாராஷ்டிர – மத்திய பிரதேச விபத்துகளில் 21 பேர் பலி….

உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று காலை குறித்த கார் மலைப்பாதை ஒன்றின் வளைவில் திரும்பியபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் த பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தின் போது கார் முற்றிலும் நொருங்கி விட்டதாகவும் அதில் பயணித்த 8 பேரும் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று அதிகாலை மகாராஷ்டிர மாநிலம் பால்கர் நகரில் மரத்தில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் மத்திய பிரதேசத்தில் கந்த்வா-பரோடா நெடுஞ்சாலையில் மணல் ஏற்றி வந்த பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.